பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு
திரௌபதி அம்மன் திருக்கோயில் குண்டம் இறங்கும் திருவிழாவில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே. கள்ளிப்பாளையம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் உடனமர் தர்மராஜா திருக்கோயில்
அமைந்துள்ளது. இக்கோயிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயிலின் குண்டம் பொங்கல் விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கிராம சாந்தி நிகழ்வு, முளைப்பாலிகை எடுத்தல் போன்ற நிகழ்வுகளோடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 25 அடி தூரத்திற்கு குண்டம் அமைக்கப்பட்டு இரண்டு நாட்களாக மரக்கட்டைகளை எரியவிட்டு தயார்படுத்தப்பட்ட குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தபின் பெண்கள்,குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருளாடியபடி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். குண்டம் இறங்கிய பக்தர்கள் கருவறையில் உள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மனை வழிபாடு செய்தனர்.
34 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குண்டம் இறங்கும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். வே.கள்ளிப்பாளையம், கள்ளக்கிணறு, வாவிபாளையம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில்
இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
ரெ.வீரம்மாதேவி
34 ஆண்டுகளுக்குப் பின் திரௌபதி அம்மன் கோயில் குண்டம் இறங்கும் திருவிழா-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு திரௌபதி அம்மன் திருக்கோயில் குண்டம் இறங்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே. கள்ளிப்பாளையம் கிராமத்தில்…






