தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 771ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று புதிதாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 20,227 பேரில், 3.8 சதவீதம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,678ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,63,068 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வரத்தில் மட்டும் புதிதாக 4,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 345 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 பேருக்கும், மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 55 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 44 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது. இன்று 7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யடவில்லை.







