டி-20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

டி-20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12…

டி-20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-2- பிரிவில் இன்று 2 லீக் போட்டிகள் நடக்கின்றன. அபுதாபியில் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில், நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பயங்கர எதிர்பார்ப்பில் இருக்கிறது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளின் அரையிறுதி வாய்ப்பை இந்தப் போட்டிதான் முடிவு செய்ய இருப்பதால்தான் அந்த எதிர்பார்ப்பு. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்குச் சென்றுவிடும். தோற்றால், இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். இந்திய அணி அடுத்து எதிர்கொள்ளும் நமிபியாவை தோற்கடித்தால் அரை இறுதிக்குள் செல்லலாம். இதனால் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் கடந்த போட்டியில் இடம்பெற்ற வீரர்கள் அப்படியே இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியில், காயம் காரணாமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த சுழற்பந்துவீச்சாளர் முஜிப் அணிக்குத் திரும்பி இருக்கிறார்.
இதையடுத்து விக்கெட் கீப்பர் முகமது ஷஷாத்தும் ஹஸ்ரத்துல்லா ஷசாயும் களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மில்னே பந்துவீச்சில் ஷஷாத் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளிலேயே ஷஷாத் போல்ட் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து ரமானுல்லாவும் நைப்பும் ஆடி வருகின்றனர். அந்த அணி 5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.