சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். கடந்த சில வருடங்களாக மோசமான ஃபார்மில் இருக்கும் இவர், ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தவில்லை. இதற்கிடையே டி-20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்த அவர், அந்த போட்டிகளிலும் எந்த அதிரடியையும் காட்டவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், முன்னாள் சாம்பியனான அந்த அணி, அரையிறுதிக்குள் நுழையாமல் வெளியேறியது. அப்போது அந்த அணியின் மூத்த வீரர் பிராவோ, தனது ஓய்வை அறிவித்தார். அவருடன் சென்ற கிறிஸ் கெயிலும் வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ரசிகர்களுக்கு கையை அசைத்தார். இதனால் அவரும் ஓய்வு பெற்றுவிட்டதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், ’நான் எப்ப ஓய்வு பெறப் போறேன்னு சொன்னேன்?’ என்று கேட்டிருக்கிறார் கிறிஸ் கெய்ல். வீடியோ மூலம் அளித்த பேட்டி ஒன்றில் இதை அவர் கூறியுள்ளார்.
’’தனிப்பட்ட முறையில் இது எனக்கு ஏமாற்றமான உலகக் கோப்பை. இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஜமைக் காவில் என் சொந்த மக்கள் முன் விளையாடி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இன்னும் ஒரு உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கி றது. ஆனால் அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. பார்க்கலாம். அப்படியொரு எண்ணம் இல்லை என்றால், நான் எப்போதோ ஓய்வை அறிவித்திருப்பேன். பிராவோவுடன் இணைந்து சென்றிருப்பேன். ஆனால், நான் என் சொந்த மக்களுக்கு நன்றி சொல்லாமல் ஓய்வு பெற முடியாது’ என்று தெரிவித்திருக்கிறார்,