பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் பதிலடி – எல்லைப் பகுதிகளில் தொடரும் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தலிபான்கள் போதிய…

Afghanistan retaliates by targeting several Pakistani military positions - tension continues in border areas!

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தலிபான்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களின் பயிற்சி மையத்தை குறிவைத்து கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.24) தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஊடுருவல் தொடர்பான பாகிஸ்தானின் குற்றச்சாட்டை தலிபான் அரசாங்கம் மறுத்தது. தங்கள் மண்ணில் இருந்து எந்த நாட்டுக்கும் எதிராக தாக்குதல் நடத்த யாரையும் அனுமதிப்பதில்லை என்று அந்நாட்டு அரசு கூறியது. இதன் தொடர்ச்சியாக, பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (டிச.28) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை ஒருங்கிணைத்த தீங்கிழைக்கும் சக்திகள், அவர்களின் ஆதரவு மையங்கள் மற்றும் மறைவிடங்களாக செயல்பட்ட புள்ளிகள் ஆகியவற்றை ஆப்கன் படைகள் குறிவைத்தன” என்று தெரிவித்துள்ளது.

ஆனால், அந்தத் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது, அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்ற விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிடவில்லை. இருந்தாலும், இந்தத் தாக்குதலில் 19 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாக தலிபான் ஆதரவு நாளிதழான ஹுரியத் டெய்லி நியூஸ் தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளதை தென்கிழக்கு மாகாணமான கோஸ்டில் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடியதாகவும் அந்த நாளிதழ் கூறியது.

இரு நாடுகளும் நட்பு பாராட்டி வந்த நிலையில், தற்போது எதிரெதிர் நிலைகளை எடுத்திருப்பது ஆப்கன் – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.