முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து ராக்கெட் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் ராணுவ படைகளை திரும்பப் பெற்றுள்ள நிலையில், தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தாலிபான்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், பக்ரீத் திருநாளை முன்னிட்டு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், தலைநகர் காபுலில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து 3 ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

காபுல் அருகே உள்ள பர்வான்-இ-சே, பாக்-இ-அலி மர்தான், சமான்-இ-ஹொசோரி ஆகிய பகுதிகளில் இருந்து இந்த ராக்கெட் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரார்த்தனைகளுக்குப் பின்பு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் அஷ்ரப் கனி, இந்த பக்ரீத் திருநாள், வீரமரணம் அடைந்த ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களின் பெருமையைப் போற்றும் நாளாக அமையும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தாலிபான்களுக்கு அமைதியின் மீது விருப்பம் இல்லை என விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா!

ஒரேயொரு வாக்கு பெற்ற கோவை வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்

Halley Karthik

வங்கதேச விடுதலைப் பொன்விழாவில் இந்திய குடியரசுத் தலைவர்

Saravana Kumar