புதுச்சேரியில் மருமகனுக்கு மாமனார் கொடுத்து அனுப்பிய சீர்வரிசை அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதைபோல், தெலுங்கு மக்கள் ஆஷாதம் விழா கொண்டாடுவது வழக்கம். ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த பலராம் என்பவர், தனது மகளை புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் உள்ள பவன்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆஷாதம் விழாவையொட்டி, மருமகன் பவன்குமாருக்கு, கிலோ கனக்கில் மீன்கள், இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழிகள், ஆயிரம் கிலோ காய்கறிகள் மற்றும் 50 வகையான இனிப்புகள் ஆகியவற்றை சீராக அனுப்பிவைத்து பலராம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். வண்டி, வண்டியாக சீர் கொண்டு வரப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.








