ஏ.ஆர்.ரகுமானின் ’ரெக்கே’ இசையில் களமிறங்கும் மாமன்னன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
https://twitter.com/mari_selvaraj/status/1662081347341680640?t=GHtaJ4jmaIibb3bDcGh3_w&s=08
இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ கடந்த மே 19 ஆம் தேதி வெளியானது. வைகை புயல் வடிவேலுவின் குரலில் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மாமன்னன் திரைப்படத்தின் அடுத்த பாடல் மே 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் ’ரெக்கே’ இசையில் களமிறங்கும் மாமன்னன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.







