பண்ருட்டி தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் வேல்முருகனுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களை சந்தித்த வேல்முருகன் ஆதரவு கோரினார். இதையடுத்து வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சால்வை அணிவித்தனர். இதற்கிடையே பாமக, அமமுக, அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு வேல்முருகன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.