”ஆளும் கட்சியாக அதிமுக மாறும் காலம் விரைவில் வரும்” : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு!

விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அடுத்த ஆளும் கட்சியாக அதிமுக மாறும் காலம் விரைவில் வரும் என முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர்…

விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அடுத்த ஆளும் கட்சியாக அதிமுக மாறும் காலம் விரைவில் வரும் என முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர் “ தற்போது ஒன்றரை கோடி தொண்டர்களை உறுப்பினராக கொண்ட அதிமுக விரைவில் 2 கோடி உறுப்பினர் இலக்கை அடைய உள்ளது. தற்போது பிரதான எதிர்க்கட்சியாகவும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் ஒரே கட்சியாகவும் அதிமுக  உள்ளது.

இந்த நிலை மாறி ஆளுங்கட்சியாக அதிமுக மாறும் காலம் விரைவில் வரவுள்ளது. அதனை நோக்கி தான் நாம் பயணம் செய்து வருகிறோம். பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது பல வெற்றிகளை பெற்று வருகிறார். இந்த வெற்றி தொடரும் என்றார்.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.