ஆரணியில் அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் பெயரை சொல்லாததால் கோபமடைந்த எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் புதியதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா மற்றும் முன்னாள் அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்றது.
மேற்கு ஆரணி ஒன்றியம் கீழ்நகர் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி நிகழ்ச்சியில் புதிய மாவட்ட செயலாளர் ஜெயசுதா மற்றும் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்காததால் அங்கிருந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஒருவர் கோபமடைந்தார்.
அவர் மேடையிலேயே மாவட்ட செயலாளர் ஜெயசுதா மற்றும் முன்னாள் அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் மேடையில் எம்ஜிஆர் குறித்து 5 நிமிடம் புகழ்ந்து பேசி கோபமடைந்த ரசிகரை கூல் செய்தார் மாவட்ட செயலாளர் ஜெயசுதா. பிறகு கோபமடைந்த எம்ஜிஆர் ரசிகரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அவரிடம் அழைத்துச் சென்று கௌரவிக்கப்படும் என அந்த ரசிகருக்கு கூலாக பேசி அந்த ரசிகருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.







