திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் உள்ளிட்ட முறைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொற்று குறைந்ததன் காரணமாக பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு ரூ.300 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தொற்று பரவல் மேலும் கணிசமாக குறைந்ததால் இலவச தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.