முக்கியச் செய்திகள் இந்தியா

வீட்டுக் காவலில் மீண்டும் மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி மீண்டும் வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி கிலானியின் இறுதிச் சடங்கில் அவர் உடல் மீது பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டது சர்ச்சையானது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த மெகபூபா முப்தி, மத்திய அரசைக் குறை கூறியிருந்தார்.

அதில், மறைந்த ஒருவரின் இறுதிச்சடங்கை நடத்த அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. அதை கூட அரசு அனுமதிக்க வில்லை. ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி முப்தி முகமது ட்விட்டரில், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் உரிமைகள் குறித்து கவலைப் படும் மத்திய அரசு, காஷ்மீர் மக்களின் உரிமைகளை மறுக்கிறது. நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். காஷ்மீர் நிர்வாகத்தின் கருத்துப்படி காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை. இயல்புநிலை இருப்பதாகக் கூறும் போலித்தனத்தை வெளிக்காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.

 

Advertisement:
SHARE

Related posts

குடியரசு தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணி!

Jayapriya

விதிகளை மீறினால் உரிமம் ரத்து… திரையரங்குகளை எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்!

Jayapriya

முதல்வரை அவதூறாக பேசியதாக திமுக எம்.பி., ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!

Halley karthi