டீசல் திருடியதாக ஓட்டுநர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

சேலம், மணியனூர் பகுதியில், டீசல் திருடியதாக ஆட்டோ ஓட்டுநரை, அரை நிர்வாணமாக கட்டி வைத்து, உரிமையாளர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சேலம் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மினி…

சேலம், மணியனூர் பகுதியில், டீசல் திருடியதாக ஆட்டோ ஓட்டுநரை, அரை நிர்வாணமாக கட்டி வைத்து, உரிமையாளர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சேலம் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மினி ஆட்டோவின் ஓட்டுனராக கடந்த 7 ஆண்டுகளாக பீரித்தி பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஆட்டோவில் இருந்து 30 லிட்டர் டீசலை பீரித்தி திருடி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மினி ஆட்டோ உரிமையாளர் ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஹரி, விஜய் ஆகிய மூவரும் மதுபோதையில் கடந்த மூன்றாம் தேதி மணியனூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று கயிற்றால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீரித்தி இதுகுறித்து போலீசாரில் புகாரளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார்  விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பினரும் சமாதனமாக செல்வதாக கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும், ஆட்டோ ஓட்டுநர் பீரித்தி தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.