”ஆதித்யா எல்-1” விண்கலம் அனுப்பிய செல்ஃபி, பூமி மற்றும் நிலவின் புகைப்படம்..!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், ஒரு செல்ஃபியுடன் நிலா மற்றும் பூமியை சேர்த்து ஒரு படம் எடுத்து அனுப்பியிருக்கிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57…

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், ஒரு செல்ஃபியுடன் நிலா மற்றும் பூமியை சேர்த்து ஒரு படம் எடுத்து அனுப்பியிருக்கிறது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது, தொடர்ந்து, புவியின் சுற்றுவட்டப்பாதையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலைநிறுத்தினர்.

பின்னர், ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டப் பாதையின் உயரம் 245 கிலோமீட்டர் மற்றும் 22 ஆயிரத்து 459 கிலோமீட்டர் என்ற அளவில் செப். 3-ம் தேதி உயர்த்தப்பட்டது. இதனைதொடர்ந்து ஆதித்யா விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை நேற்று முன்தினம் இரண்டாம் கட்டமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் கேமரா மூலம், தன்னைத் தானே ஒரு செல்ஃபி எடுத்துள்ளது. தொடர்ந்து, பூமி மற்றும் அதற்கருகே சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் நிலாவும் சேர்ந்து இருக்குமாறு ஒரு புகைப்படத்தையும் எடுத்துள்ளது. இதனை விடியோவாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

https://twitter.com/isro/status/1699663615169818935

அந்த விடியோவில், ஆதித்யா எல்-1 விண்கலம் தன்னை எடுத்த செஃல்பியும், தொடர்ந்து அரைவட்டத்தில் பூமியும், அதற்கு அருகே மிகச் சிறிய அளவில் நிலவும் தெரிகிறது. பூமி மெல்ல சுற்றும்போது, நிலவு பளிச்சென தெரிந்து பிறகு சிறியதாக மாறுகிறது. நிலவு இருக்கும் பகுதியை இஸ்ரோ அம்புக்குறியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.