உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய தலைநகா் ஜதாவில் 20 ஆவது ஆசியான்-இந்தியா மற்றும் 18-ஆவது கிழக்காசிய உச்சிமாநாடுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடியை புலம்பெயர்ந்த இந்தியர்கள் கைகுலுக்கி வரவேற்றனர். அவருக்கு இந்திய கலாசார நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது :
இந்த மாநாட்டில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது. இங்கு அனைவரின் குரலும். கோரிக்கைகளும் கேட்கப்படுகிறது. ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது, ஏனெனில் உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆசியான் அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது.
“எங்கள் வரலாறு மற்றும் புவியியல் இந்தியாவையும் ஆசியானையும் ஒன்றிணைக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.







