திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஆதவ் அர்ஜுனா!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், விசிக கட்சி அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்து ஆதவ் அர்ஜுனா வாழ்த்துப் பெற்றார்.

விசிகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெகவில் இணைவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவ்வாறே இன்று தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா. விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா அவருக்கு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை பரிசாக வழங்கினார். அம்பேத்கர், பெரியார் இருக்கும் சிலையையும் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.