முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாடாளுமன்றத்தை அதிர வைத்த அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முதல் கூட்ட தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பகுதி கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றம் தொடங்கிய உடனே லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசியதோடு, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் இந்த விவகாரம் தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிறகு மீண்டும் இரண்டாவது நாள் கூட்டத் தொடரின் போதும், அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகள்
எழுப்ப, ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக ஆளுங்கட்சியினரும் பேச துவங்கி தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

பிறகு இதனை தொடர்ந்து மூன்றாவதுநாள் கூட்ட தொடரிலும், மக்களவை நடவடிக்கைகள் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் மக்களவையில், ராகுல் காந்தி விவகாரமும், அதானி விவகாரமும் அமளியை ஏற்படுத்த மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 4வது நாளான இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று காங்கிரஸ் தொண்டர்களும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை

Gayathri Venkatesan

கொரோனா காலத்தில் யுபிஎஸ்சி தேர்வெழுத இயலாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Web Editor

தினமும் 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்: குறுந்தகவலை நம்பி ரூ. 8 லட்சத்தை இழந்த ஊழியர்

Web Editor