பாய்ந்து ஓடி வேட்டையாடும் பனிச்சிறுத்தை – திக் திக் நிமிடங்கள்.. வைரல் வீடியோ

இந்தியாவின் லடாக் பகுதியில் பாய்ந்து ஓடி பனிச்சிறுத்தை வேட்டையாடும் நிகழ்வை புகைப்பட கலைஞர் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பனிப்பிரதேசங்களில் பல்வேறு விலங்குகளை காண்பது அரிது. அதிலும்…

இந்தியாவின் லடாக் பகுதியில் பாய்ந்து ஓடி பனிச்சிறுத்தை வேட்டையாடும் நிகழ்வை புகைப்பட கலைஞர் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பனிப்பிரதேசங்களில் பல்வேறு விலங்குகளை காண்பது அரிது. அதிலும் வேட்டையாடி இரையை பிடித்து கொன்று சாப்பிடுவதை காண்பது அரிது. ஆனால் புனேவை சேர்ந்த புகைப்பட கலைஞர் வேதாந்த் திட்டே மற்றும் எடித் பார்ஷி என்ற இருவர் எடுத்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பனிச்சிறுத்தை ஒன்று காட்டு ஆடு ஒன்றை துரத்தி செல்கிறது. காட்டு ஆடு தப்பித்துச் செல்வதற்கு தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்கிறது. ஆனால் பனிச்சிறுத்தை மிக வேகமாக சென்று அந்த ஆட்டை வேட்டையாடுகிறது. இந்த தருணத்தை அப்படியே தனது கேமிராவில் இருவரும் படம் பிடித்துள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்து வேதாந்த், இயற்கை வழங்கக்கூடிய தருணத்தை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. இதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.  இயற்கை ஆர்வலரான வேதாந்த் வனவிலங்கு ஆராய்ச்சி, விலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.