முக்கியச் செய்திகள் இந்தியா

ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் முடிவை திரும்பப்பெற்றது அதானி குழுமம்!

பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் அதானி குழுமம் அறிவித்துள்ளது.

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக, உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான நிலையிலும் பங்குகள் வேண்டி விண்ணப்பித்த பங்குதாரர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானியின் சந்தை மதிப்பு குறைந்துவரும் நிலையில், இந்திய அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில், உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் ஒன்பதாம் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேட்மிண்டன் அணியை சந்தித்த பிறகு பிரதமர் என்ன கூறினார் தெரியுமா?

EZHILARASAN D

கோவையில் 27-ம் தேதி சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி – ரசிகர்கள் உற்சாகம்

EZHILARASAN D

விபத்துகளில் உயிரிழந்த 83% பேர், சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் – மத்திய அரசு

G SaravanaKumar