நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!

நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி(94) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை சௌகார் ஜானகி 1959-ஆம் ஆண்டு வெளியான கன்னடா மொழியில் முதல் பான் இந்தியா திரைப்படமான மகிஷாசுர மர்தினியில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சௌகார் ஜானகி டாக்டர் ராஜ்குமாருடன் நடித்தார். அந்த வகையில், சௌகார் ஜானகி புகழ்பெற்ற பான் இந்தியா நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.