நடிகை ஸ்ருதி ஓடிடி-யின் மிக பெரிய Fan!

நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய ஓடிடி தளங்களின் ரசிகை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். ஓடிடி தளம் குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் இணையற்றது எனத் தெரிவித்தார். அவெஞ்சர்ஸ் போன்ற…

நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய ஓடிடி தளங்களின் ரசிகை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

ஓடிடி தளம் குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் இணையற்றது எனத் தெரிவித்தார். அவெஞ்சர்ஸ் போன்ற பிரமாண்ட படங்கள் தியேட்டர்களுக்காக தயாரிக்கப்படுவதாகவும் ஆனால், ஓடிடி தளங்களுக்கு தான் பெரிய ரசிகை என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், உலகம் முழுவதும் இருந்து அனைத்து வகையான கதைகளை, இந்த தளங்கள் வழங்குவதாக கூறினார். சில சிறந்த படங்களை, ஓடிடி தளங்களில் பார்த்ததாகவும் தெரிவித்தார். ஓடிடி தளங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய சில கதைகள் இருக்கின்றன என்றும் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களின் நன்மைகளை அறிந்திருப்பதால் இரு தரப்பையும் புரிந்துகொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.