காணாமல்போன ஐ-போன் டன்சோவில் திரும்பி வந்தது குறித்து நடிகை ஷாலு ஷம்மு சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமடைந்த நடிகை ஷாலு ஷம்மு சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி நடிகை ஷாலு ஷம்மு எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார். பின்னர், சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது ஐ-போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், புகாரில் தனது நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், காணாமல்போன ஐ-போன் டன்சோ மூலம் பார்சலில் வந்துள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள பதிவில், தான் சந்தேகப்பட்ட நபர்தான் தனது செல்போனை திருடியுள்ளார் என்றும், எட்டு வருட நட்பு வீணாக போனது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா