’குஷி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் சினிமாவிலிருந்து ஒரு ஆண்டு வரை விலகி இருக்க நடிகை சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ’குஷி’ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். இந்த காட்சியுடன் ஷூட்டிங் நிறைவடைவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைக்கும் இந்தப் படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனுடம் வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடித்து முடித்தார்.
இந்நிலையில், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.







