தென் கொரியா சுற்றுலாத்துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

தென்கொரியா நாட்டின் சுற்றுலாத்துறை கௌரவ தூதராக நடிகை பிரியங்கா அருள் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா மோகன் நடிப்பில் கடந்த மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான படம் ‘மேட் இன் கொரியா’. தென் கொரியாவை மையமாக வைத்து உருவான இந்த ஃபீல் குட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 3 நாட்கள் அரசு முறை பயணமாக தென்கொரிய அதிபர் லீ ஜே மியூ இந்தியா வந்திருந்தார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்தில் நடிகை பிரியங்கா மோகனும் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தென் கொரியாவை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட மேட் இன் கொரியா திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தென் கொரியா சுற்றுலா துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகனை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.