நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்

இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த 2020 ஆம்…

இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை மீரா மிதுன் மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில் நடிகை மீராமிதுன் சமூக வலைதளங்களில் தனது பெயரையும், புகைபடத்தையும் தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

அதனடிப்படையில் அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் மீராமிதுன் மீது எம்.கே.பி நகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே சமீபத்தில் பட்டியலினத்தோர் குறித்து இழிவாக பேசி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஜோ மைக்கல் பிரவீன் தொடர்ந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுன் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்போடு 10வது எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மீராமிதுன் சார்பாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரப்பட்டது. பின்னர் இரு வாதங்களை கேட்ட நீதிபதி லட்சுமி, போலீஸ் காவல் கேட்கும் அளவுக்கு பெரிய அளவில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி போலீசாரின் மனுவை நிராகரித்தார். மீராமிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.