ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளிவந்த ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி திரைப்படம் சிறப்பாக இருப்பதாக நடிகை கஜோல் பாராட்டியதற்கு, நடிகர் ரன்வீர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து எடுத்த கே2ஹெச்2 எனும் குச் குச் ஹோடா ஹேய் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து பல படங்களை தயாரித்தும், 9 படங்களையும் இயக்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட், ரன்வீர் சிங் வைத்து ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தமிழில் சூர்யா ஜோதிக நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் கதையை போலவே பெண் வீட்டிற்கு செல்லும் ரன்வீர் சிங்கின் செய்யும் சேட்டைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படம் வெளியாகி 3 நாளில் ரூ.45.90 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தினை பல திரைப்பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் நடிகை கஜோல், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கரண் ஜோஹர் நீங்கள் மீண்டும் வந்து விட்டீர்கள் எனப் பதிவிட்டு பாராட்டியுள்ளார். நடிகை கஜோலின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள நடிகர் ரன்வீர் சிங், நன்றி மேடம். கரண் ஜோஹரின் வரலாற்று சிரப்புமிக்க ரொமான்ஸில் நானும் பங்கு கொண்டதற்கு பெருமையாக உள்ளது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும், பிரபல திரைக்ககதை ஆசிரியரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த கமர்சியல் ஹிந்திப்படம் இதுதான். நகைச்சுவையும் அழுத்தமான எமோசன் காட்சிகளும் பிடித்தவர்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய படம் என கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா