நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் உட்கார வைத்து காதுகுத்த வேண்டும் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றது. தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின், இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.
தொடர் சர்ச்சைகளில் சிக்கிய தம்பதியர்கள், குழந்தைகளின் பெயரையும், முகத்தையும் வெளியிடாமல் காத்து வந்தனர். விக்னேஷ் சிவன் ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில், குழந்தைகளை பற்றி பதிவிடும் போது,’உயிர்’, ‘உலகம்’ என பதிவிட்டு வந்தார்.
இந்தையடுத்து ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்தார். அதன்படி, ஒரு மகனுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் ( Uyir Rudronil N Shivan ) என்றும் மற்றொரு பிள்ளைக்குஉலக் தெய்விக் என் சிவன் ( Ulag Dhaiveg N Shivan ) என்றும் பெயர் சூட்டியது அவரது ரசிகர்களுக்கு தெரிய வந்தது . இவர்களின் பெயர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் வித்தியாசமானதாக உள்ளதாக பலரும் தெர்வித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்பட ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டு பேசிய போது அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையில் நடந்த சுவாரஷ்யமான தகவலை பகிர்ந்துகொண்டார். அவர் பேசியிருந்த அந்த பேட்டியில், வல்லவன் திரைப்படத்தில் இருந்தே நடிகை நயன்தாரா எனக்கு நல்ல பழக்கம். என்னை அண்ணா என்றே அழைப்பார். நானும் அவரை தங்கச்சி என்று தான் கூப்பிடுவேன்.
ஒருநாள் நயன்தாரா வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அவர் தனது குழந்தைகளிடம், மாமா வந்திருக்கார் என்று அறிமுகம் செய்தார். உடனே நானும் உங்களுடைய குழந்தைகள் 2 பேருக்கும் என் மடியில் வைத்து காது குத்தனும் என்று சொன்னேன். அதற்கு அவங்களும் சீர்வரிசை எல்லாம் பண்ணனும் என்று கலகலப்பாக பேசியதாக தெரிவித்தார். தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் குறித்து நடிகர் சந்தானம் பேசிய இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா