‘விருமாண்டி’க்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் நடிக்கும் அபிராமி!

‘விருமாண்டி’ படத்திற்கு பிறகு நடிகை அபிராமி மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப்…

‘விருமாண்டி’ படத்திற்கு பிறகு நடிகை அபிராமி மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.  படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.  படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்,  கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
தக் லைஃப் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படியுங்கள்:  கேப்டன் மில்லர் | இன்று வெளியாக உள்ள ‘கில்லர் கில்லர்’ பாடல் – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்நிலையில் இப்படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் ஜனவரியில் தொடங்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

நடிகை அபிராமி நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  மதுரை வட்டார மொழியைக் கச்சிதமாகப் பேசி நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார்.  மிடில்கிளாஸ் மாதவன், சமுத்திரம் படங்களிலும் தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகை அபிராமி 2004 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அங்கு ராகுல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.  தற்போது, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.