நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று அடக்கம் : திரைபிரபலங்கள் அஞ்சலி!

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.  நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. தமிழ் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி…

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. 

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
தமிழ் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இவர் திரைப்பட தயாரிப்பாளர். இவர்களுக்கு 2 மகள்கள். இவரது மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மின்விசிறியில் தொங்கி உயிரை மாய்த்த கொண்ட நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டது.

பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு மீராவின் உடல் டிடிகே சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு தந்தை விஜய் ஆண்டனி அறையில் படுத்து தூங்கினார். இன்று 19 ஆம் தேதி அதிகாலையில் பார்த்த போது மீரா மின்விசிறியில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது.

உடனே வீட்டு பணியாளர் உதவியோடு உடலை கீழே இறக்கி கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றளர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு மீராவின் உடல் டிடிகே சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதுதொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டம் 174 (இயற்கைக்கு மாறான மரணம்) பிரிவின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணி வரை மீராவின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர், சென்னை நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்தில் காலை 9 மணிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்ற பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு 11 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.