கார்களில் வைக்கப்படும் சிறிய குப்பைத் தொட்டி!

ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா நகராட்சி தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தி கார்களில் வைக்கப்படும் சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக பஞ்ச்குலா நகராட்சி மேயர் குல்பூஷன் கோயல் கூறுகையில், “பெரும்பாலும் காரில்…

ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா நகராட்சி தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தி கார்களில் வைக்கப்படும் சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக பஞ்ச்குலா நகராட்சி மேயர் குல்பூஷன் கோயல் கூறுகையில், “பெரும்பாலும் காரில் செல்பவர்கள் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு சாலையில் வீசிவிட்டுச் சென்றுவிடுவார்கள். இதனால் நகராட்சியின் தூய்மை பாதிக்கப்படுகிறது.

மேலும் அதிகரிக்கும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தூய்மையின் அவசியத்தை நாம் அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக பஞ்ச்குலா நகராட்சியில் கார்களில் வைக்கப்படும் சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த சிறிய வகையான குப்பைத் தொட்டியை எளிதாக காரில் வைத்துக்கொண்ட பயணம் செய்யமுடியும்.

அதேபோல் நிலத்தைப் பாதிக்காத எளிதில் மக்கும் கை பைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.