ஹைதரபாத்தில் உள்ள உணவகம் ஒன்று, இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு, நடிகர் சோனு சூட்டின் பெயரை வைத்து அவரை கவுரவப்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் சோனு சூட், தனது மனிதாபிமான செயல்களால் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர். சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் இவரை பலர் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஹைதரபாத்தில் உள்ள உணவகம் ஒன்று, சோனு சூட்டை மேலும் கவுரவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஹைதரபாத்தின் கோண்டாப்பூர் அருகே கிஸ்மத் ஜெயில் மண்டி என்ற உணவகம் உள்ளது. சிறையை அடிப்படியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த உணவகம், ’இந்தியாவின் மிகப்பெரிய தட்டை’ அறிமுகப்படுத்தி, அதற்கு சோனு சூட்டின் பெயரை சூட்டியது.
ஒரு பெரிய தட்டு உணவுடன் தான் கேமராவுக்கு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட், ”இந்தியாவின் மிகப் பெரிய தட்டு, இப்போது என் பெயரில் அழைக்கப்படுகிறது. சைவ உணவு உண்பவர் என்பதாலும், குறைவான அளவே உணவு உட்கொள்பவர் என்பதாலும், ஒரே நேரத்தில் 20 பேருக்கு உணவளிக்கும் ஒரு தட்டு, எனது பெயரில் இருக்க முடியாது” என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : பிரேசில் கார்னிவல் திருவிழா – விதவிதமான உடைகளில் அணிவகுத்துச் சென்ற செல்லப்பிராணிகள்
இவரது இந்த பதிவை குறிப்பிட்ட கிஸ்மத் ஜெயில் மண்டி உணவகம், “இந்தியாவின் மிகப் பெரிய தட்டுக்கு உங்களது பெயரை தவிர்த்து வேறு சிறந்த பெயரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களது உணவகத்தை, உங்களின் நேர்மறையான என்ணங்களால் நிரப்பியதற்கு நன்றி” என்று பதிவிட்டிருந்தது.