நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த டமாஸ்கஸ் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
2011-ஆம் ஆண்டு சிரியா-இஸ்ரேல் இடையே போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேல் அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் உளவுத்துறை தலைமையகம் இருக்கும் டமாஸ்கஸ் குடியிருப்பு பகுதியில் 10 மாடி கட்டிடம் மீது சிரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த வான்வழி தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குடியிருப்புகளை நோக்கி இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. பலர் காயமடைந்தள்ளனர்.
சிறிய அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் Hezbollah என்ற அமைப்பினை குறிவைத்து ஏற்கனவே நுற்றுக்கணக்கான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதும் அவர்களை குறிவைத்தே இந்த தாக்குதல்களை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிரியா மற்றும் துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி அன்று ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களுக்குப் பிறகு 46,000 -க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 41,000 ஆக உள்ள நிலையில், அண்டை நாடான சிரியாவில் 5,800 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்து 2 வாரம் கூட ஆகாத நிலையில், இந்த பேரிழப்பிலிருந்து மீண்டு வருவதற்குள் இஸ்ரேல்-சிரியா மீது நடத்தியுள்ள இந்த ஏவுகணை தாக்குதல் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக” கருதப்பட வேண்டும் என்று சிரியா வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் மெக்தாத் கூறியுள்ளார்.
அதேபோல் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகங்களின் இயக்குநர் ஜெனரல் முகமத் அவாத் கூறுகையில், டமாஸ்கஸ் கோட்டையைச் சுற்றியுள்ள சேதமடைந்த கட்டிடங்கள், கலை மற்றும் பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் வரலாற்று தளத்தை நிர்வகிப்பதற்கான அலுவலகங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. “தாக்குதலில் அழிக்கப்பட்ட இந்த கட்டிடங்களை மீண்டும் மீட்டெடுக்க நிறைய செலவாகும்”. இதுதவிர அரிதான விலையுயர்ந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர இன்னும் சில காலங்கள் ஆகலாம் என தெரிவித்துளளார்.
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்ச்சியில் இருந்து சிரியா மக்கள் மீண்டு வருவதற்குள், சிரியாவின் பாலை வனப்பகுதியான அல்-சொக்னா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். இந்த இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே தற்போது, இஸ்ரேல் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா











