சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட #Amaran | ராணுவ வீரர்கள் பாராட்டு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படம் ராணுவ வீரர்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த…

Actor ,Sivakarthikeyan, movie , Amaran , screen, special show , soldiers

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படம் ராணுவ வீரர்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘அமரன்’ திரைப்படம் வருகிற 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. அண்மையில், ‘அமரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள் : கோவா திரைப்பட விழா| #JigarthandaDoubleX தேர்வு!

இதனிடையே, நேற்று இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், 2 மணி 48 நிமிடங்கள் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘அமரன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி டெல்லியில் ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்டது. அவர்களிடமிருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தத் திரையிடல் நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.