டானிடம் ஆசிர்வாதம் பெற்ற சிவகார்த்திகேயன்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த டான் திரைப்படத்தை இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கினார். அண்மையில் வெளியாகி ரசிகர்களின்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த டான் திரைப்படத்தை இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கினார். அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் 12 நாள்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலை அள்ளியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.

பல்வேறு திரைப் பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில், ” இந்திய சினிமாவின் டானை சந்தித்து அவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றேன். அந்த 60 நிமிடங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள். டானை திரைப்படம் பற்றிய பாராட்டுக்கும், நேரத்தை ஒதுக்கியதற்கும் நன்றி தலைவா” எனப் பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.