தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் | அரசியல் வருகையா?

சென்னையில்  நடிகர் சிவகார்த்திகேயன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், நேற்றைய தினம் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து…

சென்னையில்  நடிகர் சிவகார்த்திகேயன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், நேற்றைய தினம் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

ஏற்கனவே, தளபதி என்று அழைக்கப்படும் விஜய் , தற்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், கோலிவுட்டின் அடுத்த தளபதி யார் என்ற கேள்வியும் இருந்து வருகிறது. அதாவது, அந்த இடத்தை யாரு நிப்ப போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தளபதி விஜய்யை போல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த ரசிகர் சந்திப்பில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பல ரசிகர்கள் குவிந்துள்ளனர். மண்டபமே நிறைந்தபடி ரசிகர்கள் பட்டாளமே உளது, இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை வைத்து சிவகார்த்திகேயனின் சமீபத்திய நகர்வுகள் தளபதி இடத்தை நோக்கியே உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி சிவகார்த்திகேயன் தொடர்ந்து விஜய் பட இயக்குனர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘SK 23’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குருய்ப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் கூட்டணி பேச்சு
வார்த்தையில் தீவிரம் காட்டி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற
கட்சியை ஆரம்பித்து நிர்வாகிகளை சேர்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர்
சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையில் அரசியல் சம்பந்தமான பேச்சு ஏதேனும் பேசப்பட்டதா, அல்லது நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக தொடங்கும் விதமாக ஏதேனும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.   தற்போது நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை அழைத்து சந்தித்துள்ளது அரசியல் கட்சி வருகைக்கான முன்னோட்டமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

https://twitter.com/Vignesh58Viki/status/1767799497193627797

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.