நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பலரும் சிவாஜி கணேசன் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மறந்தாலன்றோ நினைப்பதற்கு என்ற கருத்து இருப்பினும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகள் கூடுதலாகத்தான் மனதில் வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் 1928 அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார். பராசக்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், அந்த நாள் , நவராத்ரி, வீரபாண்டிய கட்டபொம்மன். தேவர் மகன், முதல் மரியாதை உள்பட 288 திரைப்படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ (1966), பத்ம பூஷன் (1984), தாதா சாகேப் பால்கே விருது (1996), செவாலியர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சிவாஜி கணேசன் 21 ஜூலை 2001 அன்று தனது 72 ஆவது வயதில் காலமானார்.




