நடிகர் சிம்பு நடிக்கும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின், இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்துக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார். ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் பாடல்களை கவிஞர் தாமரை எழுதுகிறார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சிம்பு ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இதன் படப்பிடிப்பு, விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் லுங்கி அணிந்தபடி சிம்பு தனது நண்பர்களுடன் உள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.







