இந்தியாவில் பரவலான மக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதன்படி இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.







