நடிகர் ரஜினி – தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு குறித்து கேள்வி-தமிழிசை செளந்தரராஜன் பதில்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். நடிகர்…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். நடிகர் ரஜினி – தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ரஜினி தமிழக ஆளுநரை சந்தித்தை அரசியலாக்குகிறார்கள். அரசியல் மக்களுக்கானது. அதை யார் வேண்டுமானாலும் பேசலாம். அதே வேளையில் அவர் கட்சி அரசியல் தான் பேசியிருக்க வேண்டும் என்பதல்ல. கலை அரசியலும் பேசியிருக்கலாம். ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதற்கு உரிமை உள்ளது.

ஆளுநர் பதவி ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளராக இருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார். அவர் இன்று ஒன்று நாளை ஒன்று என பேசுவார் மொத்தமாக பேசி முடிக்கட்டும் பிறகு பதில் சொல்கிறேன். அவர் என்ன பாராட்டவா போகிறார்?

அரசியல் நம் சமூகத்தில் தவிர்க்க முடியாதது. சமூக அக்கறை கொண்ட யாரும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று அரசியல் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.