அண்ணாத்த திரைப்படம் வெளியான போது மழை வராமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக ஓடியிருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஹூட் தளத்தில் குரல் பதிவை வெளியிட்டார். அதில் அவர் அண்ணாத்த திரைப்படம் 50-ஆவது நாள் விழாவையொட்டி, படக்குழுவினருக்கு தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பின் போது நேரிட்ட கொரோனா பாதிப்புகளால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பல போராட்டங்களுக்குப் பிறகு கொரோனா விதிகளைத் தீவிரமாகப் பின்பற்றி பின்னர் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாக அதில் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “படம் வெளிவந்த பிறகு விமர்சனங்கள் சாதகமாக இல்லை. வெளிவந்து 3 நாட்கள் ஆனவுடன் கடும் மழை பெய்து , மக்கள் நடமாடவே முடியவில்லை. படம் வெளிவந்த போதே மழை பெய்திருந்தால் கண்டிப்பாகத் தோல்வி அடைந்திருக்கும். சிவா , கலாநிதி மாறனின் நல்ல மனதால் படம் வெளிவந்தபோது மழை இல்லை . மழை இல்லை என்றால் படம் இன்னும் நன்றாக ஓடி இருக்கும்” என்று தெரிவித்தார். இறுதியாக, “ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் , கைவிட மாட்டான்… ஆனால் கெட்டவங்கள…” என்று அவரது ஸ்டைலில் பேச்சை முடிவு செய்தார்.







