அண்ணாத்த….அண்ணாத்த..’தாண்டி வா கடமைகள் காத்திருக்கு’

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியானது.மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் இப்பாடலை பாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’அண்ணாத்த அண்ணாத்த’…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியானது.மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் இப்பாடலை பாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’அண்ணாத்த அண்ணாத்த’ என தொடங்கும் இந்த பாடலை பாலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். பாடல் தொடக்கத்தில் எஸ்பிபியை பெருமைப்படுத்தும் விதமாக ‘இசை மேதை SPB ஐயா அவர்களுக்கு எங்கள் இசை வணக்கங்கள்’ என தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

ஒரு காலக்கட்டத்தில் நடிகர் ரஜினியின் மாஸ் ஹிட்டான எல்லா பாடல்களையும் எஸ்பிபியே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது. ‘அதாண்டா இதாண்டா’,’நான் ஆட்டோக்காரன் ஆட்டோகாரன்’, ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ என்ற பாடல்களெல்லாம் பட்டி தொட்டியெல்லாம் பல ஆண்டுகள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவைகள்.

இந்த டிரெண்ட் ‘பேட்டை’ படத்திலும், ’தர்பார்’ படத்திலும் கூட தொடர்ந்தது. ஆனால் இந்த காம்போ கபாலி படத்தில் மாறியது. தற்போது மீண்டும் இயக்குநர் சிவா அந்த ட்ரெண்டை தொடங்கியுள்ளார். ஆனால் 2020-ம் ஆண்டு செப்.25-ம் தேதி பாடகர் எஸ்பிபி காலமானார். இந்நிலையில் அவரின் குரலில் மீண்டும் நடிகர் ரஜினிக்காக ஒலிக்கும் அண்ணாத்த படத்தில் வெளியான இப்பாடல் ஒரு விதமான சந்தோசம் கலந்த வருத்தமாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.