முக்கியச் செய்திகள் விளையாட்டு

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்: சாதனை அஜாஸ் திடீர் நீக்கம்

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாதனை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் நீக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் விளையாடுகிறது. வரும் 1 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் 9 ஆம் தேதி 2 வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்த சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல், அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான ஆடுகளம் என்பதால் அணியில் இருந்து அஜாஸ் நீக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பேர் கொண்ட அணியில், சுழற்பந்து வீச்சாளர்களில் ரச்சின் ரவீந்திரா மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழங்கையில் காயமடைந்துள்ள கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

Arivazhagan CM

அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது; பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Saravana Kumar

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: எம்.எல்.ஏக்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Vandhana