நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்து பா.ரஞ்சித்தைப் பாராட்டிய நடிகர்  ரஜினிகாந்த். 

தனது வாழ்வின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட ரஜினிகாந்த் படக்  குழுவினருக்கு பாராட்டுக்களைத்  தெரிவித்துள்ளார்.  பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப்  பெற்று வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின்  பாராட்டுகளையும்…

தனது வாழ்வின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட ரஜினிகாந்த் படக்  குழுவினருக்கு பாராட்டுக்களைத்  தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப்  பெற்று வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின்  பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.  துஷாரா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த  படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு  இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்து  தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது  படம்தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் என அனைத்தும்  மிகச்சிறப்பு,  எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக எனது ஆரம்பக்கால நாடக வாழ்க்கையையும் எனக்கு ஞாபகப்படுத்தியது இந்த படம் என்றார். நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது, என்று தனது  நாடக கால வாழ்வின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட ரஜினிகாந்த் படக்  குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தனது பாராட்டுக்களைத்  தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் படக்குழுவைப் பாராட்டியதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குநர் பா ரஞ்சித் இதைத் தனது விட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதே நேரத்தில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.