பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் சரியான அரசியலை பேசியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் பா.ராஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
துஷாரா விஜயன், காளிதா ஜெயராம், ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் மேடை நாடகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கூட்டத்தில் கலையரசன் நடிப்பு கற்றுக்கொள்ள வருகிறார். பின்பு காதலை மையமாக வைத்து ஒரு மேடை நாடகத்தை உருவாக்குகின்றனர், அதனுள் நடக்கும் பல கதைளே நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதை. ஆண் பெண் காதல், திருநங்கைகளின் காதல், ஓரினச்சேர்க்கை, ஜாதி, அரசியல், நாடக காதல் என அனைத்தும் சேர்ந்த கலவையாக இப்படத்தினை பா.ரஞ்சித் கொடுத்துள்ளார்.
படம் வெளியானதும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். பா.ரஞ்சித்தின் கதைகள் அரசியல் மற்றும் சாதிகளை மையப்படுத்தியே எடுப்பதால், அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்த பின்னர், பா.ரஞ்சித் ஒவ்வொரு படத்திலும் அரசியலை சரியாக பேசி வருகிறார் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜாதியை எதிர்த்து தான் இனி படங்கள் வரட்டுமே என தெரிவித்துள்ள ரசிகர்கள், LGBTQ மக்களின் அரசியலை மிகவும் நுணுக்கமாக சரியாக எடுத்துள்ளார் என்றும், இந்த படம் மிகவும் புதுமையான காதல் படம் என படத்தை பார்த்த பின்னர் ரசிகர்கள் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்








