மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வரும் இப் படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் என முன்னணி நடிகர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவும் ரஜினியும் போட்டியை ரசித்துக் கொண்டே உரையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.
இதையும் படியுங்கள் : எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை
இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்தார். உத்தவ் தாக்கரேவின் குடும்பத்தினருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சந்திப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.