மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்குமாறு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் குடும்பத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த2021ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக துணை நிலை ஆளுநருக்கு, தலைமைச் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டதால், சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் ஊழல் உறுதியானாதால் துணை முதல்வர் மணீஷ் சிசோடியோ உள்ளிட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதேபோல சத்யேந்தர் ஜெய்ன் என்ற அமைச்சரும் ஊழலில் சிக்கி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இருவரும் திகார் சிறையில் உள்ளனர். இருவரும் தங்கள் பதவியை இந்த மாதத் தொடக்கத்திலேயே ராஜினாமா செய்தனர்.
இதையும் படிக்க: தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்
சிசோடியாவுக்கு கவனித்து வந்தத் துறைகளை அதிஷி, ஜெயின் வசம் இருந்தத் துறைகளுக்கு பரத்வாஜ் என்பவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பதவியேற்றுவிட்டனர். அவர்களுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்தினர் அந்த வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்துடன் அரசு பங்களாவில் தங்கியுள்ளனர். இதனால் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் அரசு இல்லத்துக்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 15 நாள்களுக்குள் அந்த வீட்டை காலி செய்ய வேண்டும். இந்நிலையில் 21ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து கொடுக்குமாறு சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்தினருக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
-ம.பவித்ரா