நடிகர் விவேக்கிற்கு ரஜினிகாந்த இரங்கல்!

“சிவாஜி படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என விவேக்கை நினைவு கூர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறைப்…

“சிவாஜி படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என விவேக்கை நினைவு கூர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறை பிரபலங்களான, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் பார்த்திபன், சத்தியராஜ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விவேக்

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “சின்னக் கலைவாணர், சமூக சேவகர் என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளக்கிறது.

சிவாஜி படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்.” என பதிவிட்டுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் விவேக் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.