நடிகர் ‘பூ’ ராமு காலமானார்

நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான பூ ராமு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி…

நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான பூ ராமு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு என ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஊரப்பாக்கம் பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. பிறகு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பிறகு நாளை இறுதி சடங்கு நடக்க உள்ளது.

இயக்குனர் சசி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ‘பூ’ ராம். அடிப்படையில் நாடக கலைஞரான இவர், ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை அப்படியே பிரதிபலித்து நடித்ததால் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.

பூ, நீர்பறவை, தங்க மீன்கள், சூரரைப் போற்று என தந்தை கதாபாத்திரத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தங்களது தந்தையை நினைவூட்டுவதாக இருந்ததென ரசிகர்களின் மனமுறுகி பாராட்டினர்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் “பீ திங்கற பன்னி மாதிரி என்ன அடிச்சு அடிச்சு விரட்டுனாங்க… ஓடி ஒளிஞ்சுப் போய்டன்னா… அப்றம் எது அவசியம்னு தெரிஞ்சிக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன்…” என கல்வியின் மேன்மை குறித்து அவர் பேசும் வசனம் இன்னும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தன்னுடைய சிறந்த நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ராமு உருவாக்கி வைத்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.