நடிகை நிவேதா தாமஸ் உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி அந்த புகைப் படத்தை தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை நிவேதா தாமஸ். தமிழில், ஜில்லா படத்தில் நடிகர் விஜய் தங்கையாகவும், கமலின் பாபநாசம் படத்தில அவர் மகளாகவும், ரஜினியின் தர்பார் படத்தில் அவர் மகளாகவும் நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு படங்களில் இப்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவர் இப்போது ஆப்பிரிக்க நாட்டில் உள்ள தான்சானியாவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 5,895 மீட்டர் உயரமுள்ள இந்த மலையில் ஏறியுள்ள அவர், நம் தேசிய கொடியை போர்த்தியபடி புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஏராளமான லைக்குகளை இந்தப் புகைப்படங்களை பெற்றுள்ளது. இதையடுத்து ரசிகர்களும் திரை பிரலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.